திருச்சி மாவட்ட அளவில் உள்ள 3 ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலக இன்ஸ்பெக்டராக இருந்த ரெங்கசாமி தற்போது திருச்சி சரக டிஐஜி அலுவலக இன்ஸ்பெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவர் கூடுதலாக வாத்தலை இன்ஸ்பெக்டராகவும் பொறுப்பு வகிப்பார்.
அவருக்கு பதிலாக எஸ்பிசிஐடி எஸ்ஐ-யாக இருந்து தற்போது இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றிருக்கும் ராமராஜ் திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலக இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். திருச்சி சரக டிஐஜி இன்ஸ்பெக்டராகவும், திருவெறும்பூர் பொறுப்பு இன்ஸ்பெக்டராகவும்இருந்த சந்திரமோகன் தற்போது திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.