Three injured in government bus collision

ஈரோடு பேருந்து நிலையத்தில் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு பி.பி.அக்கரகாரம், அஜந்தா நகரைச் சேர்ந்தவர் நாகராஜன் (75). ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள கார் ஸ்டாண்டில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இன்று காலை ஈரோடு பேருந்து நிலையத்தில் சேலம் முதல் கோவை செல்லும் அரசு பேருந்து, ரேக் அருகே அமைந்துள்ள கழிப்பிடம் அருகே சென்று திரும்பும் பொழுது நாகராஜன் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நாகராஜன் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது பேருந்தின்பின்பக்க சக்கரம் நாகராஜன் காலில் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜனை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.