Three houses in a row have been robbed - public fears Photograph: (police)
ஈரோடு மாவட்டம் ஜீவா நகரில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு ஜீவா நகரில் கண்ணம்மாள், மணிமேகலை மற்றும் அவர் வீடு அருகே மற்றொரு வீடு என 3 வீடுகளில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் முகமூடி அணிந்து உள்ளே சென்ற இந்த மூன்று வீடுகளில் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகள் மற்றும் 4 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இன்று காலை வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர்கள் உள்ளே சென்றபோது நகை திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us