Skip to main content

மது கிடைக்காததால் நண்பர்கள் எடுத்த விபரீத முடிவு!!

Published on 11/06/2021 | Edited on 11/06/2021
Three friends made a bad decision due to unavailability of alcohol

 

அரியலூர் நகரத்தைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் இளங்கோவன். இவரும் இவரது நண்பர்கள் சரவணன், மோகன் ஆகிய மூவரும் அவ்வப்போது மது அருந்துபவர்கள். கரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மது கிடைக்காமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தள்ளாடி அல்லாடி வருகிறார்கள்.

 

அதே போன்று மதுக் கிடைக்காமல் சோகத்தில் இருந்த அரியலூரை சேர்ந்த இளங்கோவன் மற்றும் நண்பர்கள ஆகிய மூவரும்  மதுபோதைக்கு சரக்கு கிடைக்காமல் தவித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் எதையாவது குடித்து போதை ஏற்றியே ஆக வேண்டும் என்று மூவரும் முடிவு செய்தனர். மூவரின் யோசனைப்படி கடந்த 7ஆம் தேதி கிருமி நாசினியாக பயன்படுத்தப்பட்டு வரும் சனிடைசர் மருந்தை வாங்கி மூருவரும் குடித்துள்ளனர். இதனால் மூவருக்கும் போதை ஏறுவதற்கு பதில் வயிறு எரிந்து உள்ளது. போதைக்காக எதையோ குடித்து உயிருக்கு கேடு ஏற்படுத்திக் கொண்டோம் என்று கதறி அழுதுள்ளனர்.

 

இவர்கள் மூவரையும் அவர்களது உறவினர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். இந்த மூவரில் இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மற்ற இருவரும் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அங்கு தீவிர சிகிச்சையில் உள்ளனர். மூவரில் ஒருவரான இளங்கோவன் போதைக்காக கிருமி நாசினி குடித்து இறந்த சம்பவம் அரியலூர் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்