'A three-foot pit in the garden; A 3-year-old boy in a washing machine'-Bagheer's confession given by Thangammal

நெல்லை ராதாபுரத்தில் மூன்று வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு வாஷிங் மெஷினில் போட்டு வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் கொலையில் ஈடுபட்ட பெண் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அடுத்துள்ளது ஆத்துக்குறிச்சி கிராமம். இங்கு வசித்து வருபவர்கள் விக்னேஷ்-ரம்யா தம்பதி. இவர்களுக்கு 6 மற்றும் 3 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். விக்னேஷ் கொத்தனார் பணி செய்துவரும் நிலையில் தாய் ரம்யாவும் வேலைக்குச் சென்று வருகிறார். இந்நிலையில் 3 வயது சஞ்சய் திடீரென காணாமல் போனார். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி பல இடங்களில் குழந்தையை தேடி வந்தனர்.

Advertisment

எதிர்வீட்டில் வசித்து வரும் தங்கம்மாள் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. காரணம், ஏற்கனவே தங்கம்மாள் சிறுவனிடம் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு தங்கம்மாளின் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் தங்கம்மாள் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பெரும் அதிர்ச்சி தரும் விதமாக மூன்று வயது சிறுவன் சஞ்சய் கொலை செய்யப்பட்டு வாஷிங்மெஷினில் மறைத்து வைக்கப்பட்டு கிடந்தான்.

'A three-foot pit in the garden; A 3-year-old boy in a washing machine'- confession given by Thangammal

இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விக்னேஷின் மகன் சஞ்சய் உள்ளிட்ட அந்தபகுதியைச் சேர்ந்த சில குழந்தைகள் தங்கம்மாளின் வீட்டின் முன்புறத்தில் கற்கள் மற்றும் கண்ணாடி துண்டுகளைப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் தங்கம்மாள் அந்த சிறுவர்களுடன் சண்டையில் ஈடுபட்டார். இந்த சண்டையானது இரு குடும்பத்திற்கான சண்டையாக மாறியது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தங்கம்மாளின் மகன் வெங்கடேசபெருமாள் எதிர்பாராத சாலை விபத்தில் உயிரிழந்தார். அந்த துக்க நிகழ்விற்கு அண்டை வீட்டாரான விக்னேஷ் வராதது தங்கம்மாளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் விக்னேஷ் குடும்பத்தார் தான் பில்லி சூனியம் வைத்து தன்னுடைய மகன் வெங்கடேச பெருமாளை கொன்றுள்ளனர் என வஞ்சம் வைத்துள்ளார்.

Advertisment

இதை வைத்துக் கொண்டே பழிதீர்க்கவிக்னேஷின் மகன் சிறுவன் சஞ்சயை கொலை செய்ததாக தங்கம்மாள் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தங்கம்மாள் அவருடைய தோட்டத்தில் மூன்றடி ஆழத்தில் கொலைக்கு முன்பாகவே குழி தோண்டி வைத்துள்ளார். எனவே திட்டமிட்டு இந்த கொலை செய்யப்பட்டதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில்நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.