Published on 24/11/2021 | Edited on 24/11/2021

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பச்சைமலை பகுதியில் காளானை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பழங்குடியினருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.
பச்சைமலையில் உள்ள தோனூர் கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி, தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விளைந்த காளான்களை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அவருடைய மனைவி காளானை சமைத்து தர, அதனை நல்லதம்பி, அவரது மனைவி செல்லம்மாள், மகன் மணிகண்டன் ஆகிய மூவரும் சாப்பிட்டுள்ளனர்.
அதன் பின் சற்று நேரத்தில் அவர்கள் மூவரும் மயங்கி கீழே விழுந்துள்ளனர். உடனே அருகில் இருந்த அவர்களின் உறவினர்கள் உதவியுடன் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் துறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நல்லதம்பியும், மணிகண்டனும் சேர்க்கப்பட்டுள்ளனர்.