Advertisment

இரண்டு நாளில் இரண்டு கட்சிக்கு தாவிய அ.தி.மு.க. நிர்வாகி! (படங்கள்)

Advertisment

அ.ம.மு.க. தென் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்த நீலாங்கரை M.C.முனுசாமி, கடந்த ஜனவரி 29- ஆம் தேதி அன்று தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியேசந்தித்துதன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

இந்த நிலையில், இன்று (31/01/2022) பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நீலாங்கரை M.C. முனுசாமி தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.

இரண்டுநாளில் நீலாங்கரை M.C. முனுசாமி இரண்டாவது கட்சியாக பா.ஜ.க.வுக்கு தாவியது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

admk Annamalai Leader
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe