Three days restrict on visiting Mettur Dam!

Advertisment

ஒமிக்ரான், கரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு, தமிழ்நாடு, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும் தடை விதித்துள்ளன. எனினும், புதுச்சேரியில் நிபந்தனைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு, அம்மாநில அரசு அனுமதி அளித்திருந்தது. இதற்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக 31-ஆம் தேதி சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகள் தடைகளை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வேலூரிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போலீசார் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணையைப் பார்வையிடத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கரோனா, ஒமிக்ரான் பரவல் தடுப்பு கட்டுப்பாடு காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணை மற்றும் பூங்காவை டிசம்பர் 31, ஜனவரி 1,2 உள்ளிட்ட மூன்று நாட்கள் பார்வையிடத் தடைவிதிக்கப்படுவதாக மேட்டூர் சார் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.