Three-day holiday... Traffic jam in the outskirts of Chennai!

மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் சென்னையிலிருந்து அதிகப்படியான மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வரும் நிலையில் செங்கல்பட்டு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

சனி, ஞாயிறு, திங்கள் உள்ளிட்ட மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். அதிகப்படியான மக்கள் சொந்த ஊர் திரும்புவதால் தனியார் பேருந்துகளில் பேருந்து கட்டணங்கள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திண்டிவனம் அருகே ஓங்கூர் பால பராமரிப்பு பணி நடைபெற்று வருவதாலும், சுங்கச்சாவடி கட்டண வசூல் காரணமாகவும் சுமார் 5 கிலோமீட்டருக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் சென்னை புறநகர் பகுதியில் வாகனங்கள் காத்திருக்கின்றன.