/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/food4555.jpg)
சென்னை தீவுத்திடலில் மூன்று நாட்கள் உணவுத் திருவிழா தொடங்கியுள்ளது. திருவிழாவில் வயிற்றை நிறைக்கவும், மனதை நிறைக்கவும் பலஅம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
பார்க்கலாம், ரசிக்கலாம், சுவைக்கலாம், வாங்கியும் செல்லலாம் என்ற வகையில் அமைத்திருக்கிறது சென்னை உணவுத் திருவிழா. உணவுப் பாதுகாப்புத்துறை நடத்தும் இந்த உணவு திருவிழாவில் 200 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய அரிசி வகைகள், இயற்கை உணவுத் தானியங்கள், ஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகள், மீன்வளத்துறை உணவு வகைகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்து சிற்றுண்டி வகைகள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு அரங்கில் இடம் பெற்றுள்ளன.
நெல்லை உள்ளிட்டபல்வேறு மாவட்டங்களின் தனித்துவமான உணவு வகைகள், தின்பண்டங்களின் விற்பனை அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.
உணவுத் திருவிழாவில் மூன்று நாட்களும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதோடு, ஹோட்டல் நடத்த உரிமம் எப்படி வாங்குவது போன்ற விளக்கங்களும் அளிக்கப்படுகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)