Three day flower show starts in Chennai

Advertisment

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று நாட்கள் மலர்க்கண்காட்சி சென்னையில் இன்று தொடங்கியது. சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் இதனைத் தொடங்கிவைத்தார். கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மலர் வகைகள் கொண்டுவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜுன் 5ஆம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த மலர்க்கண்காட்சியை காண பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.20 நுழைவுக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. மலர்க்கண்காட்சியை காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.