தொடர்ந்து நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில்இன்று இறுதிநாளாகும். இன்றுநடந்த கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி 2.50 கோடி ரூபாயிலிருந்து 3 கோடியாக உயர்த்தப்படயிருப்பதாகஅறிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவையில்பொதுத்துறை உள்ளிட்ட துறைகள் மீதான மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தினால் வளர்ச்சி பணிகளுக்கு உதவும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததாக பேசியமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி 3 கோடியாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார். அதேபோல் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு அதிவிரைவு சாலை என பெயர்மாற்றப்பட்டுள்ளது எனவும் அவர் அறிவித்ததுள்ளார்.