Three crore worth of gold trapped at the airport

Advertisment

துபாயிலிருந்து நேற்றிரவு திருச்சி விமான நிலையம் வந்து சேர்ந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த அலி, அப்துல் ரசாக், சிவகங்கையைச் சேர்ந்த முருகன் கண்ணப்பன், அரியலூரைச் சேர்ந்த சித்ரா கண்ணன், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அமுதா வடிவேல் உள்ளிட்ட 5 பேரிடம் ஆறு கிலோ 250 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் மதிப்பு ரூபாய் 3 கோடியே 30 லட்சம் வரை இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து அதிகாரிகள் இந்த பயணிகளிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

alt="ads" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="5f902836-b433-41ff-b63e-db31cb518943" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_162.jpg" />