bank

திண்டுக்கல்லில் கடன் வழங்குவதாக கூறி மூன்று கோடி மோசடி செய்த தனியார் வங்கியின் பெண் மேலாளரை காக்கிகள் கைது செய்தனர் .

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திவேலிடம் குன்றக்குடி அருகே உள்ள ஆவிடை பொய்கையில் சித்த மருத்துவமனை நடத்தி வரும் சொக்கலிங்கம் என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அதில் திண்டுக்கல் ஆர்.எம்.காலணியில் உள்ள தனியார் வங்கியானஅலகாபாத் வங்கியின் மூத்த பெண் மேலாளர் சொர்ண பிரியா கடந்த ஆண்டு 2017ல் மருத்துவ ஆலோசனைக்காக என்னிடம் வந்தார். அப்பொழுது எனது மருத்துவமனை விரிவாக்கத்திற்கு விவசாய கடன் வழங்குவதாக கூறினார்.

Advertisment

அதை நம்பி நானும் விவசாய கடன் என்பதால் வட்டி குறைவாக இருக்கும் என நினைத்து என்னுடைய நில பத்திரத்தை கொடுத்தேன். அதன் பின் திண்டுக்கல்லில் உள்ள வங்கியில் கணக்கு துவங்கினேன்.

அதன் அடிப்படையில் வங்கியின் மூத்த மேலாளர் சொர்ணபிரியா ரூ.50 லட்சம் வரை கடன் வழங்க முடியும் என்றார். ஆனால் ரூ.6 லட்சம் மட்டுமே வழங்கினார். மீதி ரூ.44 லட்சத்தை தராமல் இழுத்தடித்தார். என்னுடைய நிலப்பத்திரமும் அவரிடம் தான் உள்ளது. என்னுடைய பெயரில் “ஹெர்பல் ஹேர்” என்ற பெயரில் ரூ.50 லட்சம் கடன் வழங்கியதாக மோசடி செய்து உள்ளார். இதே போல் மேலும் பலரிடம் ஆவணங்களை வாங்கி கொண்டு இந்த வங்கி மேலாளர் சொர்ணபிரியா மூன்று கோடிக்கும் மேல் ஏமாற்றியுள்ளார்.

Advertisment

இப்படி வாங்காத கடனுக்கு வங்கியில் கடனை செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள் . இப்படி என்னைப் போலவே சொர்ணபிரியா பலரிடம் மோசடி செய்துள்ளார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுசம்மந்தமாக காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் இந்த மனுவை மாவட்ட குற்றப்பிரிவுக்கு அனுப்பி அதிரடியாக விசாரிக்க உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் எஸ் ஐ. விஜயலட்சுமி அதிரடி விசாரணை செய்து மூன்று கோடி மோசடி செய்த வங்கியின் மூத்த பெண் மேலாளர் சொர்ண பிரியா மீது மோசடி வழக்கு பதிவு செய்து சொர்ணபிரியாவை கைது செய்தனர். இச் சம்பவம் திண்டுக்கல்லில் வங்கி ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.