Three college students bathed in Kalvatangam river; One person was loss their live

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர் உயிரிழந்த நிலையில் 3 பேர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ளது கல்வடங்கம் காவிரி ஆறு. இந்த ஆற்றில் எடப்பாடி அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ தமிழ் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த மாணவர்கள் 10 பேர் குளிப்பதற்காக வந்துள்ளனர். அப்பொழுது மணிகண்டன், பாண்டியராஜன், முத்துசாமி, மணிகண்டன் ஆகிய நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி மாயமாகினர்.

Advertisment

உடனடியாக எடப்பாடி தீயணைப்பு துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் விரைந்துவந்த மீட்புப் படையினர் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் உதவியோடு நீரில் மூழ்கிய மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மணிகண்டன் என்ற மாணவனின் உடல் மட்டுமே மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ள மூன்று மாணவர்களை தேடும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.