Advertisment

சேத்தியாத்தோப்பு அருகே மூன்று குழந்தைகளை வாய்க்காலில் வீசிக் கொலை செய்த தாய்

Advertisment

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சத்தியவதி(27) இவரது கணவர் மணிகண்டன்(35) இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவர் மோசமான குடிப்பழக்கத்தில் உள்ளதாலும், சரியான முறையில் குழந்தை மீது பராமரிப்பு இல்லாததாகவும் தினமும் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மனம் உடைந்துபோன சத்தியவதி புதன் கிழமைஇரவு தனது மூன்று குழந்தைகளான அக்ஷயா(6) நந்தினி (4) தர்ஷினி (2.) ஆகியவர்களை ஈவு இரக்கமின்றி உயிரோடு சேத்தியாத்தோப்பு அருகே பின்னலூர் அருகே ராஜா வாக்காலில் தூக்கி வீசிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் காட்டுமன்னார்கோவில் காவல் ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் அண்ணாமலை உள்ளிட்ட சேத்தியாதோப்பு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்புத் துறையினரின் உதவியோடு மூன்று குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மூன்று குழந்தைகளையும் கொன்றதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் குழந்தைகளின் தாய் சத்தியவதியை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

பெற்ற தாயே 3 குழந்தைகளையும் வாய்க்கால் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

murder incident Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe