style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
திரைப்பட இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் மீது சென்னையில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு திட்டங்களைவிமர்சித்ததாக சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் புகார் அளித்ததின் பேரில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சமீபத்தில் வெளியான சர்கார்படத்தில் இலவசத் திட்டங்கள் குறித்து சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக அதிமுகவினர்போராட்டம் நடத்தினர்.
பின்னர் அந்த காட்சிகள்நீக்கப்பட்டது. ஆனால்இலவச திட்டங்களை விமர்சித்து பொதுமக்களை தூண்டுவதாக இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் தேவராஜ் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் தற்போது புகார் அளித்தார். அதனடிப்படையில்153 ,153ஏ 505 ஏ பி சி ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் முருகதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யதுள்ளது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ். ஏற்கனவே இதே விவகார வழக்கில் ஏ ஆர் முருகதாஸைகைது செய்ய தடை விதித்திருந்தது நீதிமன்றம் என்பது குறிப்பட்டத்தக்கது.