ஒரே பெண்ணை காதலித்த விவகாரம்; இளைஞரைக் கொன்று புதைத்த மூன்று சிறுவர்கள் 

Three boys arrested for love issue nellai

நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூரை சேர்ந்த தங்கதுரைமகன் ராஜேந்திரன் (20). பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு சென்றிருக்கிறார். ஆனால் அதன்பின் ராஜேந்திரன் வீட்டிற்கு வரவில்லை. இதனைத்தொடர்ந்து அக்கம்பக்கம்மற்றும் உறவினர் வீடுகளில் ராஜேந்திரனை தேடி பார்த்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது பெற்றோர் திசையன்விளை காவல் நிலையத்தில்புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையேஇருசக்கர வாகனத்திற்கு தீ வைத்தது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இந்நிலையில் அந்த16 வயது சிறுவன், வேறு ஒருவரிடம் போலீஸ் என்னை முதலில் அழைத்தபோதுராஜேந்திரன் கொலை தொடர்பாக விசாரிக்கத்தான் என்று நினைத்தேன், ஆனால் அதற்கு இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்த தகவல் போலீசாருக்கு கிடைக்க, உடனடியாக 16 வயது சிறுவனை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் ராஜேந்திரனும், 16 வயது சிறுவனையும் ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ராஜேந்திரனை இரண்டு சிறுவர்களுடன் சேர்ந்து 16 வயது சிறுவன் கொலை செய்து அரசூர் பகுதியில் புதைந்துள்ளது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மூன்று 3 சிறுவர்களையும் கைது செய்த போலீசார், கொன்று புதைக்கப்பட்ட ராஜேந்திரனின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். ஒரு பெண்ணுக்காக மூன்று சிறுவர்கள் சேர்ந்து ஒருவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

arrested nellai police
இதையும் படியுங்கள்
Subscribe