Advertisment

“என்னடா லுக்கு...” - சிறுவனைத் தாக்கிய போதை ஆசாமிகள்!

Three beated a 17-year-old boy at a chicken rice shop

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் அடுத்த குமரேசன் மகன் சரவணன் (17) இவர் தமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகே உள்ள சிக்கன் ரைஸ் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட வந்துள்ளார். அப்போது காந்திநகர் பகுதியைச் சார்ந்த பிர்தோஷ்(19) மற்றும் சாய்பாபா நகர் பகுதியைச் சேர்ந்த ரோஹித் ரவிச்சந்திரன் (19) அய்யத் நகர் பகுதி சேர்ந்த சாய் பிரசாத் (19) ஆகிய மூவரும் அதே சிக்கன் ரைஸ் கடைக்கு மது போதையில் வந்துள்ளனர்.

Advertisment

அப்போது சரவணனைப் பார்த்து மதுபோதையில் இருந்த மூவரும், “என்னடா லுக்கு.. யாரை பார்த்து சிரிக்கிறாய்...” எனக்கூறி நெஞ்சின் மீது தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 17 வயது சிறுவன் தனது மாமாவான விஜி என்பவருக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விஜி மற்றும் அவருடைய குடும்பத்தினர் மது போதையில் இருந்த மூன்று பேரையும் சரமாரியாக நடுரோட்டில் அடித்து துவம்சம் செய்தனர்.

Advertisment

இந்தச் சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் மது போதையில் இருந்த மூன்று பேரையும் மற்றும் அதே போல் 17 வயது சிறுவன் குடும்பத்தினரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். “இப்படி எல்லாம் இனிமே நீங்க சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது... அடிச்சுக்க கூடாது... புரியுதா.. போயிட்டு வாங்க” என இரு தரப்பினரிடமும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

thirupathur hotel police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe