Advertisment

புதுச்சேரியில் ஆன்லைனில் லாட்டரி விற்ற 3 பேர் கைது! 

latary

Advertisment

புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி அருகே வில்லியனூரில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றுவாய்க்கால்பேட் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேர் போலீஸாரை கண்டவுடன் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, அவர்களை விரட்டிப் பிடித்த போலீசார் அவர்களிடம் சோதனை செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் (24), ஆற்றுவாய்க்கால்பேட் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (20), புதுநகரைச் சேர்ந்த முரளி (26) ஆகியோர் என்பதும் அவர்கள் ஆன்லைன் மூலம் 3 நம்பர் கேரள லாட்டரி சீட்டுகளை விற்பதும் தெரிய வந்தது. அதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் ரூ.53,900 ரொக்கம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

lotory puthuvai
இதையும் படியுங்கள்
Subscribe