Three arrested in musuri in girl case

Advertisment

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகாவைச் சேர்ந்த சிறுமியை 5 பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய 2 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

முசிறி தாலுகாவைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரை அவரின் உறவினரான ரெங்கநாதன் (21) என்பவர்தனது பைக்கில்காவிரி கரையோரத்தில் உள்ள தைலமரக்காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு குளிர்பானத்தில் மதுவைக் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர், ரெங்கநாதன், மணி (எ) மணிகண்டன், தர்மா (எ) கணேஷ் உட்பட நான்கு நண்பர்களை வரவழைத்துள்ளார். பின்னர் 5 பேரும் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதனை செல்போனில் வீடியோவாகவும் படம் எடுத்துள்ளனர்.

Three arrested in musuri in girl case

Advertisment

பின்னர், அந்த வாலிபர்கள் வீடியோவை வெளியிட்டு விடுவோம் எனக் கூறி மீண்டும் வெவ்வேறு இடங்களுக்கு வரவழைத்து மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த வருடம் மே மாதம் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இந்நிலையில், சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிவதைக் கண்ட அவரது பெற்றோர், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். குழந்தைத்திருமணம் குறித்து தகவலறிந்த சமூகப் பாதுகாப்புத்திட்ட அலுவலர்கள்காவல்நிலையத்தில் புகாரளித்து சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். தற்போது வரை சிறுமி காப்பகத்திலேயே இருந்து படித்து வருகிறார்.

இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதில் ஐந்து பேரில் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை வாட்ஸ்ஆப்-ல் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வாட்ஸ்ஆப்-ல் வைரலாக பரவியது. அதனைக் கண்ட சிறுமியின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மகளின் நிலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் மனு அளித்தனர். இதையடுத்து காப்பகத்தில் இருந்த சிறுமியைமுசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மகளிர் போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி புகார் மனு பெற்றனர்.

Three arrested in musuri in girl case

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்தரபட்டியைச் சேர்ந்த ரெங்கநாதன் மற்றும் மணி என்ற மணிகண்டன், தர்மா (எ) கணேஷ் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மேலும் இருவர் மீதுவழக்குப் பதிவு செய்து அவர்களைத்தேடி வரும் நிலையில், சிறுமியைத்திருமணம் செய்த வாலிபர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.