Threats to shopkeeper demanding removal of roadside shop

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கடந்த 25-ம் தேதி திமுகவின் மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடை பெற்றது. பொது கூட்டம் நடைபெறும் இடத்தில் வேலூரின் பிரபலமான உணவு வகையான முட்டை சேமியா சாலையோர கடைகள் உள்ளது. இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென அங்கு வந்த திமுக நிர்வாகிகள் சிலர், டொக்.. டொக்.. என சத்தம் வருது கூட்டம் நடக்கும் இடத்தில் தொந்தரவாக உள்ளது. அதனால் முட்டை சேமியா போடுவதை நிறுத்தும்படியும், கடையை அங்கிருந்து தள்ளிப்போடும் படியும் கூறியுள்ளனர்.

Advertisment

அதற்கு, ‘பொது கூட்டம் நடப்பது குறித்து எங்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் திடீரென தூரபோகச்சொன்னா என்ன அர்த்தம்..’ எனக் கேட்டுள்ளனர். ‘அது எப்படிப்பா கூட்டம் போடறது உங்களுக்கு தெரியாம இருக்கும்..ரெண்டு நாளா வேலை நடக்குது, ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டி இருக்கோம். தெரியாதுன்னு சொன்னா என்ன அர்த்தம்? இப்ப என்ன உங்களுக்கு கொஞ்சம் தள்ளி தான போட சொல்றோம் என நிர்வாகிகள் கேட்டுள்ளனர்.

Advertisment

ஆனால், ‘எங்களால் கடையை எடுக்க முடியாது என கடைக்காரர் கறாராக கூற அதற்க்கு ஆந்திரமடைந்த நிர்வாகிகள் "நாளையில் இருந்து கடைபோட மாட்ட" என மிரட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.