Skip to main content

குழந்தைகளை அச்சுறுத்தும் குட்டி வெங்காயவெடி! 

Published on 18/09/2018 | Edited on 19/09/2018
onion bomb


 

திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளை, குழந்தைகளை அச்சுறுத்தும் பாப் பாப வெங்காய வெடி பரபரப்பாக விற்பனையாகி வருகிறது. 

தீபாவளி மற்றும் கோயில் விழாக்களின் போது பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த பட்டாசுகள் அரசு அனுமதி பெற்று தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் வெங்காய வெடி இருந்தது. இந்த வெடியை கைகளால் தரையிலோ, அல்லது சுவர்களிலோ அடித்தால் வெடிக்கும். மேலும் இந்த வெடி அதிக அழுத்தம் இருந்தாலே வெடித்து விடும். இதனால் இந்த வெடி, ஆபத்தானது எனக்கூறி தமிழக அரசு பல ஆண்டுகளுக்கு முன்பே தடைசெய்தது. 

ஆனாலும் இந்த வெங்காய வெடி ஆங்காங்கே ரகசியமாக விற்கப்படுவதாக கூறப்படுகிறது. திருவிழா காலங்களில் கிராமப்புறம் பகுதியில் வெங்காயவெடி வெடிக்கப்படுகிறது. இந்த நிலையில் வெடியின் அளவு குறைத்து.. சின்ன டாப்பாவில் வெங்காய வடிவில் இந்த ஆபத்தனான வெங்காய வெடி திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்பட பல்வேறு பகுதிகளில் தற்போது பாப் பாப் என்ற பெயரில் பெட்டிகடைகளிலேயே அதுவும் பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்துவதால் பள்ளிகள் முன்பு உள்ள கடைகளில் தான் அதிகளவில் விற்கப்படுகிறது. 

ஒது ஒரு சிறிய பெட்டியில் இருந்து வெங்காயம் போன்ற சிறிய அளவிலான இருக்கும் பட்டாசு. இதனை கையில் வைத்து சிறுவர்கள் வெடித்து வருகின்றனர். பழைய வெங்காய வெடியில் வெடி மருந்து அதிகம் வைக்கப்பட்டிருக்கும். அதனால் அதை தரையில் வீசி வெடிக்கும் போது சத்தமும் அதிகமாக இருக்கும். 

இந்த புதிய வெங்காய வெடியான பாப்-பாப் வெடி அளவில் மிக சிறியது. அதனால் சிறுவர்கள் இந்த பாப் - பாப் வெடிகளை அதிக அளவில் வாங்கி தரையில் வீசி வெடித்து வருகின்றனர். மேலும் இந்த வெடியை சாலைகளில் செல்வோர் மீதும், குறிப்பாக இளம் பெண்கள் மீது வாலிபர்களும், பள்ளி மாணவர்களும் வீசி வெடிக்கச் செய்கின்றனர். இதனால் சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வெடியை வீசிய பள்ளி மாணவர்களின் உறவினர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. இந்த பாப் - பாப் என்கிற நவீன வெங்காய வெடி அனுமதி பெற்று தயாரிக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. இந்த பாப் - பாப் வெடி பெரிய அளவில் தயாரிக்கப்பட்டு மீண்டும் வெங்காய வெடியாக உருமாறி அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் தடுக்க வேண்டும். இதை குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள் தான் இதை ஆர்வமாக வாங்கி வெடிக்கிறார்கள். இதில் நச்சுத்தன்மை கொஞ்சமாக இருந்தாலும் குழந்தைகளுக்கு பேராபத்தில் தான் முடியும். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டாசு விபத்தில் இறந்தவர்கள் இருவர்தான்! -உயிர் கணக்கில் அலட்சியம்!

Published on 08/09/2018 | Edited on 08/09/2018
ve

 

சிவகாசி – காக்கிவாடன்பட்டியில் ராஜு என்பவர் நடத்திவரும் கிருஷ்ணசாமி பயர் ஒர்க்ஸில், இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இறந்தவர்களை சாக்குமூட்டையில் அள்ளினார்கள். மாரியப்பன், கிருஷ்ணன், பொன்னுச்சாமி ஆகிய மூவர் இறந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஆனால், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடல்களை எடுத்துவந்த பிறகுதான், இருவர் மட்டுமே இறந்ததும், பொன்னுச்சாமி 100 சதவீத காயங்களுடன் உயிருக்குப் போராடி வருவதும் தெரிய வந்தது. பாண்டி என்பவரும் படுகாயம் அடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பாண்டி இறந்துவிட்டார். பொன்னுச்சாமியின் உயிர் ஊசாலடுகிறது.


கடந்த ஆண்டும் இதே பட்டாசு ஆலையில் விதிமீறல் நடந்து வெடிவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. வேறென்ன சொல்வது? வழக்கமாக நடக்கும் பட்டாசு விபத்துதான். உயிரிழப்புதான். வெடிவிபத்தில் இறந்தால், சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு குறிப்பிட்ட தொகை நிவாரணமாகக் கிடைத்துவிடும். 

 

வெடிவிபத்தில் விழும் பிணங்களுக்குத் தலைக்கு ஒரு விலை வைத்திருக்கின்றனர்.  பட்டாசுத் தொழிலாளர்களின் உயிரை யாரும் பெரிதாக கணக்கில் கொள்வதில்லை.  கொடுமைதான்!