பொள்ளாச்சிக்கு காவல் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதம்... 3 தனிப்படை அமைப்பு

Threatening letter sent to Pollachi Police Station... 3 Special Forces Organization

கடந்த 22 ஆம் தேதி இரவு வேளையில் கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இந்து முன்னணியினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலரின் கார், வீடு, வர்த்தக நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன.இதுதொடர்பாக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து பலரை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என மிரட்டல் கடிதம் ஒன்று காவல் நிலையத்திற்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்திற்கு கடிதம் வந்துள்ளது. மிரட்டல் கடிதம் பற்றி மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொள்ளாச்சி டிஎஸ்பி தீபா சுஜிதா தகவல் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் இந்த மிரட்டல் கடிதமானது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

kovai police pollachi
இதையும் படியுங்கள்
Subscribe