'' Threatening to ask for money after a break up ... '' - Youth arrested!

காதல் முறிவுக்கு பிறகு இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

கன்னியாகுமரியில் வசித்து வந்த மாணவியும், ஏர்வாடியை சேர்ந்த முகேஷ் என்ற இளைஞனும் கல்லூரியில் படித்துவந்த நேரத்தில் காதலித்ததாகக் கூறப்படுகிற நிலையில் அவர்களுக்கு இடையே காதல் முறிவு ஏற்பட்டுள்ளது. காதல் முறிவுக்குப் பின்னர் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாக முகேஷ் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளான். மேலும் இதுதொடர்பாக மிரட்டி ஒரு முறை அந்த பெண்ணின் இரண்டு பவுன் நகையை பறித்துச் சென்றதாக கூறப்படும் நிலையில் ஒருகட்டத்தில் பொறுக்க முடியாத மாணவி நாகர்கோவில் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாரளிக்க, இளைஞன் முகேஷை போலீசார் கைது செய்து விசாரித்து பின்னர் சிறையிலடைத்தனர்.