Advertisment

கணவரின் திருமணத்தை மீறிய உறவு; மனைவிக்கு கொலை மிரட்டல்!

 threat to woman in Trichy

Advertisment

திருச்சி ராம்ஜி நகர் கே கல்லிக்குடி காந்தி காலனி பகுதியைச் சேர்ந்தவர்லாரி டிரைவர் ராஜா (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி வள்ளியம்மாள் என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் ராஜாவுக்கும் செம்பட்டு திருவளர்ச்சிபட்டி பகுதியைச் சேர்ந்த சேகர் (40) என்பவரது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது பின்னர் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த பின் அதிர்ச்சியடைந்த சேகர் தனது உறவினர்கள் சண்முகம் (50), அவரது மனைவி விஜயலட்சுமி (47), சடையன் (57) ஆகியோருடன் ராஜா வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் அவரது மனைவி வள்ளியம்மாள் இருந்துள்ளார். அவரிடம்,உனது கணவர் எனது உறவு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துள்ளார். இதனை அவர் நிறுத்திக் கொள்ளாவிட்டால் உன்னையும் உன் குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் என மிரட்டியதோடு வீட்டின் மீது கல்வீசித்தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் ராஜா வீட்டு மேல் கூரை ஓடுகள் உடைந்து நொறுங்கின. இதுகுறித்து வள்ளியம்மாள் ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் சேகர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

threat police woman trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe