
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்குக் கொலை மிரட்டல் விடுத்தவரின் முன் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் உட்கட்சி பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு சமூக வலைதளங்கள் வாயிலாகக் கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இதுதொடர்பாக திமுகவைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்கக்கோரி விஜயகுமார் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மனுதார் தரப்பில் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பால் முன் ஜாமீன் வழங்க இயலாது எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)