Advertisment

ரஷ்யாவிலிருந்து வந்த இ-மெயில்; தகிக்கும் தலைநகர்!

 threat to more than 80 schools in Delhi

டெல்லியில் 80க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

டெல்லியில் உள்ள மூன்று பள்ளிக்கு இன்று காலை இ - மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

இந்த நிலையில் தற்போது டெல்லியில் உள்ள 80க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு தற்போது வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. உடனடியாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இ - மெயிலை போலீசார் ஆய்வு செய்தபோது அது ரஷ்யாவிலிருந்து ஒரே ஐ.பி. முகவரியிலிருந்துதான் 80க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மிரட்டல் வந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Delhi police Russia schools
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe