இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி 94 ஆண்டுகள் நிறைவு பெற்று 26.12.2019 அன்று 95-ம் ஆண்டு அமைப்பு தின விழா காண்கிறது.

Advertisment

thozhar nallakannu birthday

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக, தொழிற்சங்க தலைவராக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய தோழர் கே.டி.கே.தங்கமணியின் நினைவு நாள் 26.12.2019. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், சுதந்திர போராட்ட வீரர் தோழர் ஆர்.நல்லகண்ணுவின்96 ஆண்டு பிறந்த நாள் 26.12.2019.

Advertisment

ஆகிய மூன்று நிகழ்ச்சிகளும் வரும் 26.12.2019 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையகமான ‘பாலன் இல்ல’த்தில் (செவாலியே சிவாஜி கணேசன் சாலை) நடைபெறுகிறது.

நிகழ்ச்சிகளில் மூத்த தலைவர்கள் ஆர்.நல்லகண்ணு, தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சிகளில் கட்சி தோழர்கள், பொது மக்கள் பெருமளவில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்.

Advertisment