Advertisment

ஜவுளி கடை முன் குவிந்த இளைஞர்கள்-தள்ளுமுள்ளால் பரபரப்பு

Thousands of youths gathered in front of the textile shop - there was a commotion due to push

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திஜி சாலையில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் சலுகை விலையில் இன்று சட்டை, பேண்ட் விற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் தகவல் பகிரப்பட்டு இருந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து இன்று அந்த அறிவிப்பின்படி டி-ஷர்ட் 50 ரூபாய்க்கும், ஷர்ட் 100 ரூபாய்க்கும், பேண்ட் 250 ரூபாய்க்கும், லேடிஸ் டாப்ஸ் 120 ரூபாய்க்கும் சலுகை விலையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலை இந்த ஜவுளிக்கடையில் விற்பனை நடைபெற்றது.

Advertisment

சலுகை விலையில் விற்கப்படுவதால் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாலிபர்கள் அந்த ஜவுளி கடை முன் குவிந்தனர். மேலும் ஒரே நேரத்தில் அனைவரும் கடைக்குள் போட்டிப் போட்டுக் கொண்டு நுழைந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது . ஜவுளிக்கடை முன்பு ஆயிரக்கணக்கான வாலிபர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் கடை நிர்வாகத்தினர் திணறினர். மேலும் அந்தப் பகுதி ஈரோடு காந்திஜி ரோடு பகுதி என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் சாலையின் இரு புறங்களில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு, போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து கூட்டத்தினை அப்புறப்படுத்தினர். ஜவுளிக்கடை சார்பில் இந்த சலுகை இன்னும் ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து கடையில் இருந்து இளைஞர்கள் களையத் தொடங்கினர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நிலவியது.

Business shirt police youngsters Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe