Published on 11/06/2021 | Edited on 11/06/2021

தமிழகத்தில் ரேசன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, மூட்டை மூட்டையாக வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதே போல புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள கூத்தாவி வயல் கிராமத்தில் ஒரு கடையில் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகனுக்கு தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் லூதர்கிங் மார்டின் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுடன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்த போது அங்கு 65 மூட்டைகளில் 3200 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்த அறைக்கு சீல் வைத்த வருவாய்த்துறையினர், அங்கிருந்த சுயம்புலிங்கம் என்பவரை அழைத்துச் சென்றுள்ளனர்.