Advertisment

ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்; அச்சத்தில் மக்கள்

Thousands of floating fish; People in fear

Advertisment

திருவள்ளூரில் ஏரிக்குச் செல்லும் ஓடையில் ஆயிரக்கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஏரிக்குச் செல்லும் கால்வாயில்தோல் தொழிற்சாலைகளால் வெளியேற்றப்படும் கழிவுநீரால் மக்கள் பல பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள ஓடையில் கழிவுநீர் கலப்பதன்காரணமாக மீன்கள் இறப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தவந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஓடை பகுதியில் ஆயிரக்கணக்கில் மீன்கள் செத்து மிதப்பது அங்கிருக்கும் மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து செத்து மிதக்கும் மீன்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டை வைக்கின்றனர். இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீன்களை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

Lake environment thiruvallur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe