தொடர்ந்து ஒருவாரமாக தங்கள் கோரிக்கைகளுக்காக போராடி வரும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் போராட்டம் இன்றும் தொடர்ந்தது. பழைய பென்ஷன் திட்டமே தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஈரோட்டில் இன்று பல்வேறு இடங்களில் சாலை மறியல் செய்தனர்.
குறிப்பாக இப்போராட்டத்தில் பெண் ஆசிரியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். ஈரோட்டின் பிரதான சாலையான பிரப்ரோடு, மேட்டூர் ரோடு மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்த போராட்டத்தை நடத்தினார்கள். இதனால் ஈரோட்டின் சாலை போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது. பேருந்துகள் உட்பட பல்வேறு வாகனங்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டது. சுமார் 4 ஆயிரம் அரசு ஊழியர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர். அதனைத்தொடர்ந்து இவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.