Thousands of devotees attended the Shivalaya procession on the eve of Maha Shivaratri

குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற இந்துக்கள்விழாக்களில் ஓன்று, சிவபக்தா்கள் ஒடும் 'சிவாலய ஓட்டம்'. ஆண்டுதோறும் நடக்கும் இந்த விழாவில், சிவ பக்தர்கள் 12 சிவாலயம் கோவில்களுக்கு ஓடுவது வழக்கம். அது கல்குளம், விளவங்கோடு தாலுக்காக்களில் இருக்கும் முன்சிறை திருமலை மகாதேவா், திக்குறிச்சி மகாதேவா், திற்பரப்பு வீரபத்திரா் கோவில், திருநந்திகரை நந்தீஸ்வரா் கோவில், பொன்மனை தீம்பிலாங்குடி மகாதேவா் கோவில், பந்நிபாகம் சந்திர மவுலீஸ்வரா் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு காலகாலா் கோவில், திருவிடைக்கோடு சடையப்ப நாதா்கோவில், திருவிதாங்கோடு மகாதேவா் கோவில், திருபன்றிகோடு மகாதேவா் கோவில், திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவில் ஆகிய 12 சிவன் கோவில்களுக்கு சிவாலயம் ஓடுகின்றனா்.

Advertisment

திருமலை கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கும் பக்தா்கள், கால்நடையாக 110 கிமீ தூரம் நடந்து திருநட்டாலம் கோவிலில் ஓட்டத்தை முடிக்கின்றனா். பகல் இரவு தூங்காமல் கால் நடையாகவும் 'கோவிந்தா....கோபாலா...' என்ற கோஷத்துடன் காவி உடையணிந்து கையில் விசிறியுடன் செல்கின்றனா். இவா்களுடன் பைக், ஆட்டோ, கார், வேன்களிலும் பக்தா்கள் குடும்பம் குடும்பமாகச் செல்கின்றனா். சிவாலயம் ஒடும் பக்தா்களுக்கு 12 கோவில்களிலும் விபூதி பிரசாதமாக வழங்கப்படும். அந்தப் பிரசாதத்தை இடுப்பில் வைத்திருக்கும் சுருக்குப் பையில் நிரப்புகின்றனர். இந்தப் பக்தா்களுக்கு வழி நெடுகிலும் கஞ்சி, கிழங்கு, பழம், மோர், பானகம், தா்பூசணி, இட்லி என அந்தந்தபகுதிகளில் இருக்கும் கோவில்களில் வழங்குகின்றனா்.

Advertisment

ஆரம்ப காலங்களில் உள்ளுா் மக்களால் மட்டும் ஓடி வந்த இந்த சிவாலய ஓட்டம், தற்போது குமரி மாவட்டம் மட்டுமல்லாது, கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் விரதமிருந்து சிவாலயம் ஓடுகின்றனா். இதனால், ஆண்டுதோறும் பக்தா்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த ஆண்டு, கரோனா தாக்கத்தால் கேரளாவில் இருந்து பெரும்பாலான பக்தா்கள் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சிவாலய ஓட்டத்தினால், பக்தா்கள் செல்லும் வழித்தடங்களில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுவதால் அதைச் சமாளிக்க போலீசார்நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இதற்காக அரசு சிறப்புப் பேருந்துகளும் இயக்குகின்றன. சிவாலய ஓட்டத்தையொட்டி இன்று(11-ம்தேதி) குமரி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறை விடப்பட்டுள்ளது.