Advertisment

பஹ்ரைன் நாட்டில் உள்ள  முத்துத்தீவில் முப்பெரும் விழா

dm

பஹ்ரைன் நாட்டில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் குதை பியாவில் உள்ள சவூத் பார்க் உணவகத்தின் மேல் தளத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் முதன்மைச்செயலார் முத்துசாமி தலைமை தாங்கினார். பொருளாளர்களான இஸ்மாயில், அசோக். இளைஞர் அணிச்செயலாளர்கள் செந்தில்,

Advertisment

சிங்கமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 2G அவிழும் உண்மைகள் நூலை பாரதி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் கபீர் அஹமது அறிமுகம் செய்ய, ஒருங்கிணைந்த தமிழ் கூட்டமைப்பின்

Advertisment

ஒருங்கிணைப்பாளர் இராஜபாண்டியன் பெற்றுக்கொண்டார்.

இந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியை செயலர் சுல்தான் இப்ராஹிம் ஒருங்கிணைத்தார். அதுபோல்

இணைச்செயலார் மேனி வரவேற்புரை வழங்கினார்.

dm

நிகழ்ச்சியில் பேசிய அவைத்தலைவர் ஆம்பல் குணசேகரனோ... கற்பனைக்கு எட்டாத ஒரு பொய் கணக்கை கூறி, கட்டுக்கதை போன்றோரு வழக்கை தொடர்ந்து சமூகநீதியை நிலைநாட்டும் திமு கழகத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாட்டைசீரழித்துவிட்டார்கள். 2G வழக்கில் இறுதியில் நீதி வென்றது, அதே போல் வரக்கூடிய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் திமுக நிச்சயம் அமோக வெற்றி பெற்று வாகை சூடி நாட்டை காக்க போவது உறுதி என்று கூறினார்.

இந்த முப்பொரும் விழாவில் பஹ்ரைன் வாழ் தமிழ் சமூகத்தினரும்மற்றும் மதிமுக, மஜக, பாரதி

தமிழ் சங்கம், தமிழ் மன்றம் இந்திய சோஷியல் ஃபார்ம், காயிதே மில்லத் பேரவை மற்றும் ஒருங்கிணைத்த தமிழ் கூட்டமைப்பின் நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்த முப்பெரும் விழா இறுதியில் காசை லெனின் நன்றி கூறினார்.

DA
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe