Those who went to work were injured in the accident!

Advertisment

கரூர் டெக்ஸ்டைல் பார்க்கிற்கு ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தோகைமலை மற்றும் பஞ்சப்பட்டி பகுதிகளில் இருந்து வேலைக்கு ஆட்கள் வருகின்றனர். இவர்கள் நிறுவனத்தின் வாகனம் மூலம் தினமும் சென்றுவருகின்றனர். இந்நிலையில், உப்பிடமங்களம் அருகே வந்துகொண்டிருந்தபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு சாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், வேனில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்த மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து மாயனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.