நேற்று ஜனவரி 3, வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினம். பல ஊர்களில் இருந்தும் தூத்துக்குடி மாவட்டம் – பாஞ்சாலங்குறிச்சி சென்று, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருவது வழக்கம்.

விருதுநகர் மாவட்டம் – திருச்சுழி அருகிலுள்ள கீழபூலாங்கால், செங்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள், பரளச்சி கிராமம் வழியாக பாஞ்சாலங்குறிச்சிக்கு வாகனங்களில் கோஷமிட்டபடி சென்றனர். அப்போது, பரளச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஏதோ ஒருவிதத்தில் எரிச்சல் அடைந்துள்ளனர். வாகனங்களில் சென்றவர்கள் மதுரையிலிருந்து திரும்பியபோது, பரளச்சி காவல் நிலையம் அருகே சிலர் கல் வீசினர். கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளானவர்கள், அருகிலுள்ள தங்களின் கிராமத்துக்குச் சென்று ஆட்களைத் திரட்டிக்கொண்டு திரும்ப வந்தனர். ஏற்கனவே முன்பகை இருந்ததாகச் சொல்லப்பட்டு வரும் நிலையில், இரு தரப்பினரும் அங்கே மோதிக்கொண்டனர். இந்தக் கல்வீச்சு மோதலில், வேன்களுக்குத் தீ வைக்கப்பட்டு, நான்கு வேன்கள் சேதமடைந்தன.

Advertisment

 those who went to Kattabomman Memorial Bilateral clash near Trichy!

Advertisment

பரளச்சி காவல் நிலையத்துக்கு அருகிலேயே மோதல் நடந்ததால், அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. வெங்கடேஷுக்கு தகவல் கிடைத்து, சம்பவ இடத்துக்கு உடனே வந்துவிட்டார். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாய்ப்பில்லாத நிலையில், கோஷ்டியாக மோதிக்கொண்ட கூட்டத்தினரைக் கலைப்பதற்காக, பதற்றமான அந்தச் சூழ்நிலையில், தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி இரண்டு முறை சுட்டார். மோதலில் காயமடைந்தவர்களும் கூட்டத்தினரோடு சிதறி ஓடினார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் மண்டல டி.ஐ.ஜி. ஆனி விஜயா தலைமையில், அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நிலவுவதால், அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.