Advertisment

பெண்கள் உடை அணிந்து நூதன கொள்ளையடிக்க முயன்றவர்கள் கைது

girl

Advertisment

சென்னை பாண்டிபஜாரில் பெண்களைப்போல உடையணிந்து நூதன முறையில் கொள்ளையடிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பிரகாஷ் (27), சுஜந்த் (20) பழனி மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. பல்வேறு வேலைகளுக்காக சென்னையில் வந்து தங்கி வயதானவர்கள் உள்ள வீடுகளில் கொள்ளை அடிப்பதில் கில்லாடிகள் இவர்கள்.

குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொள்ளை கும்பல் தி.நகரில் முகாமிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற மருத்துவர் ராதாகிருஷ்ணன் (64) அளித்த புகாரின் அடிப்படையில் தான் இந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

காவல்துறை மேலும் கண்காணிப்பை தீவிர படுத்தினால் மட்டுமே இது போன்ற நூதன கொள்கைகளை தடுக்க முடியும்.

rob Those tried Women
இதையும் படியுங்கள்
Subscribe