Advertisment

'மக்களை பார்க்க நேரமில்லாதவர்கள் எல்லாம் ஆட்சியைப் பிடிப்போம் என பேசுகிறார்கள்'-எம்.பி கனிமொழி பேச்சு 

Kanimozhi MP

சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் இளம் பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது.

Advertisment

இதில் திமுக எம்.பி கனிமொழி கலந்துகொண்டுஉரையாடினார். அவரது உரையில், ''நம்முடைய எதிர்காலத்திற்கு யாரால் திட்டமிட முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.மேடையில் ஏறி எதையாவது ஒன்றை சொல்லிவிட்டு, நான் அதை செய்வேன் இதை செய்வேன் எல்லோருக்கும் அரசு வேலை கொடுப்பேன் என்று சொல்லலாம். கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் எது நிதர்சனம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். செய்ய முடியுமா? என்பது ஆட்சி நடத்த தெரிந்தவர்களால் மட்டும் தான் முடியும்..அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேடையில் ஏறி, ஆட்சி நடத்துவது என்னவென்றே தெரியாமல், மக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் வந்து கூட கேட்க முடியாமல் அதற்கு கூட நேரமில்லாதவர்கள் எல்லாம் நாளை ஆட்சியைப் பிடிப்போம் என பேசி வருகிறார்கள்.

Advertisment

அண்ணா பல்கலைக்கழகவன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டபெண் ஏன் அங்கிருந்தார் என கேள்வி கேட்கின்றனர். 'அண்ணா என்று அழைத்திருந்தால் விட்டுருப்பாரே' என்று பெண்ணை குற்றவாளி ஆக்குகின்றனர். புதுமைப்பெண் திட்டம் கொண்டு வந்த முதல்வர் பெண்களை படியுங்கள் என்று கூறியுள்ளார். பெண் உரிமை, எல்லோருக்கும் எல்லாம் உன்கிட்டவற்றை நிறைவேற்றியது திராவிட மாடல் அரசுதான்'' என்றார்.

kanimozhi seeman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe