
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சிலின்கவுரவச் செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர் ஆகியோர் பதவி வகிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் ஆர்.ராதாகிருஷ்ணன் கவுரவச் செயலாளராகவும், எஸ்.சந்திரபிரகாஷ் பொருளாளராகவும், எஸ்.கதிரேசன் துணைத் தலைவராகவும் போட்டியிட்டு வெற்றிபெற்றனர்.
கவுன்சில் விதிகளின்படி, தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன் நேரடியாக தமிழ்த் திரைப்படங்கள் தயாரிக்காத இவர்கள் மூவரும் பதவி வகிக்கத் தடை விதிக்கக் கோரி திரைப்படத் தயாரிப்பாளர்கள் கே.ராஜன், பி.டி.செல்வகுமார், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், கவுரவச் செயலாளராக ஆர்.ராதாகிருஷ்ணனும், பொருளாளராக எஸ்.சந்திரபிரகாசும், துணைத் தலைவராக கதிரேசனும் பதவி வகிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
Follow Us