Advertisment

''நேற்றுவரை விபூதியை அழித்தவர்கள் இன்று வேல்கொண்டு வருகின்றனர்'' - சி.வி.சண்முகம் தாக்கு!    

publive-image

தமிழகசட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், ஒவ்வொரு கட்சியும் தங்களது தேர்தல் பிரச்சாரம் மற்றும் கூட்டணி குறித்த நிலைப்பாடுகளில் தீவிரமாகச் செயலாற்றி வருகின்றன. அதேபோல், திமுக சார்பில் 'அதிமுகவை நிராகரிப்போம்'என்ற தலைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அம்மையார்குப்பம் கிராமத்தில் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முருக பக்தர்கள் வெள்ளி வேல் ஒன்றைப் பரிசளித்தனர். வெள்ளி வேலைஅவர் கையில் பிடித்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

publive-image

இந்நிலையில், நேற்றுவரை விபூதியை அழித்தவர்கள் இன்று வேல்கொண்டு வருகின்றனர் எனத் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக சட்டத்துறை அமைச்சர்சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார். ''தமிழர்களின் அனைத்து உரிமையும் விட்டுக் கொடுத்ததுதிமுக ஆட்சிதான். நேற்று வரை விபூதியை அழித்தவர்கள் இன்று வேல் கொண்டுவருகின்றனர்''எனத் தெரிவித்துள்ளார்.

admk CV Shanmugam stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe