pmk

ராமநாதபுரம் மாவட்டம் நீர்கோலனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி இளைஞர் மணிகண்டன் என்பவர் போலீசார் வாகன சோதனையின் பொழுது நிற்காமல் இருசக்கர வாகனத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு போலீசால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். போலீசார் விசாரணைக்கு சென்று வீடு திரும்பிய மணிகண்டன் கடந்த 5 ஆம் தேதி அதிகாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மணிகண்டன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டன் வைத்திருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட வாகனம் என்றும், அதை திருடிய நபர் மணிகண்டனிடம் குறைந்த விலைக்கு விற்றதும் தெரியவந்தது.

Advertisment

ஆனால் இந்த சம்பவத்தில் தனது மகன் மீது எந்த தவறும் இல்லாத நிலையில் எங்களது மகனை போலீசார் தாக்கி கொன்றுவிட்டதாக மணிகண்டனின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், எனது மகன் உயிரிழப்பு தொடர்பாக சரியான உண்மை தெரியவில்லை இது தொடர்பாக நீதி விசாரணை வேண்டும் என மணிகண்டனின் தாய் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

Advertisment

pmk

இந்த வழக்கின் விசாரணையில், மாணவன் மணிகண்டனின் உடலை மறுஉடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும், உடலை அடக்கம் செய்யும் வரை போலீசார் பாதுகாப்பு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான், அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அறிக்கைவாயிலாக வலியுறுத்தியிருந்த நிலையில் பாமகவின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

.இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு கடுமையான காயங்களுடன் வீடு திரும்பிய மணிகண்டன் என்ற மாணவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. காவல்நிலையத்தில் கண்மூடித்தனமாகத்தாக்கப்பட்டது தான் மாணவர் மணிகண்டனின் மரணத்திற்கு காரணமாகும். மக்களைக் காக்க வேண்டிய காவலர்களே விசாரணை என்ற பெயரில் உயிரிழப்பை ஏற்படுத்துவதை ஏற்க முடியாது. இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவர் மணிகண்டனின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

Advertisment