nn

Advertisment

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படும் நிலையில், நேற்று (24-01-24) தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள இரட்டை பாலம் பகுதியில் இரண்டு கார்களும் ஒரு லாரியும் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில், லாரி கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கீழே விழுந்தது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகிபரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தர்மபுரியிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மீது மோதியது. இதனால் அங்கு கோர விபத்து ஏற்பட்டது. காரிலிருந்து மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

vck ad

Advertisment

இந்நிலையில், இந்த விபத்தின் புதிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இளைஞர்கள் சிலர் விபத்தில் சிக்கி இருந்த மூன்று குழந்தைகளை உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றிய காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும் சிலரை காப்பாற்ற முயன்ற நிலையில் லாரியில் பற்றிய தீ மளமளவென காருக்கு பரவி காரும்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகி மீண்டும் வைரலாகி வருகிறது.