அதிமுகவில் இருந்து தோப்பு வெங்கடாசலம் நீக்கம்! 

Thoppu Venkatachalam removed from AIADMK!

தனக்கு சீட் வழங்காததால்பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் முடிவு செய்து, நேற்று (18.03.2021) மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பெருந்துறை தொகுதிவேட்பாளராக ஜெயக்குமார் என்பவரை அதிமுக தலைமை அறிவித்துள்ள நிலையில், தனக்கு சீட் வழங்காததால் சுயேச்சையாக போட்டியிட அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் முடிவு செய்திருக்கிறார். நேற்று (18.03.2021) அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாருக்கு எதிராக தோப்பு வெங்கடாசலம் மனுதாக்கல்செய்தார்.

'நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்குஆதரவாகச் செயல்பட்டவர்' என தற்போதைய அதிமுக வேட்பாளர்ஜெயக்குமார் மீது தோப்பு வெங்கடாசலம் குற்றசாட்டும் வைத்திருந்தார். இந்நிலையில், தோப்பு வெங்கடாச்சலத்தைஅதிமுகவின்கட்சி அடிப்படை பொறுப்பில் இருந்து நீக்கி அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர். கடந்த 2011, 2016 ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத்தேர்தல்களில் பெருந்துறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தோப்பு வெங்கடாசலம் என்பது குறிப்பிடத்தக்கது.

admk ops_eps Perundurai thoppu venkatachalam tn assembly election 2021
இதையும் படியுங்கள்
Subscribe