படம் ஓடுவதற்காக ஸ்டண்ட் அடிக்க வேண்டிய அவசியமில்லை எனக்கு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து நேற்று இரவு சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கடவுளின் அருளால், என்னுடைய ரசிகர்களின் ஆதரவால் நான் அந்த மாதிரியெல்லாம் படம் ஓடுவதற்காக ஸ்டண்ட் அடிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த வயதில்.. 43 ஆவது ஆண்டு சினிமா பயணத்தில் நான் பண்ண வேண்டிய அவசியமில்லை.

படத்தில் விஷயம் இருந்தால் 100 சதவீதம் நன்றாக போகும். படம் நன்றாக இருந்தால் மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள். நன்றாக இல்லை என்றால் விட்டுவிடுவார்கள்.

Advertisment

அரசியல் வேறு சினிமா தொழில் வேறு. இரண்டிற்கும் சம்பந்தம் இல்லை. இரண்டையும் சம்பந்தப்படுத்த தேவையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.