சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை மீண்டும் இயக்க அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் வழக்கு விசாரணை குறித்து சிபிஐயிடம் கேள்வி எழுப்பியது.

Advertisment

thoothukudi sterlite issue case chennai high court raise the question for cbi

இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணையின் நிலை அறிக்கை வரும் செப்டம்பர் 16ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல். அதில் செப்டம்பர் 16- ஆம் தேதி வரை நடத்தப்பட்ட விசாரணை குறித்து சிபிஐ உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும், அதிகாரிகள் தொடர்பு சம்பந்தமாகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ உயர்நீதிமன்றத்தில் தகவல். அதேபோல் பல்வேறு துறைகளிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டுள்ளது.சிசிடிவி பதிவுகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சுட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும், நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்