Advertisment

கர்நாடக முதல் அமைச்சராக குமாரசாமி புதன்கிழமை மாலை பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமல்ஹாசன் இன்று பெங்களூரு சென்றார். பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை சந்தித்தார். அப்போது நாட்டையே உலுக்கிய தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக அவர்கள் கலந்துரையாடினார்கள்.

மோடியின் தோட்டாக்களால் தமிழக மக்களை நசுக்க முடியாது என்று ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். பெங்களூரு செல்வதற்கு முன்பாக தூத்துக்குடிக்கு சென்ற கமல்ஹாசன், துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.