/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thoothukudi 33333.jpg)
சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ்- மகன் பென்னிக்ஸ் கொலை விவகாரத்தில் மேலும் ஐந்து காவலர்கள் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ்- மகன் பென்னிக்ஸ் சித்ரவதை கொலை விவகாரத்தில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகியோரை அதிரடியாகக் கைது செய்த சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். நீதிபதி உத்தரவின் பேரில் ஐந்து காவலர்களும் 15 நாள் நீதிமன்ற காவலில் பேரூரணி சிறையில் அடைத்தனர்.
பின்பு பாதுகாப்பு காரணங்களுக்காக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஐந்து காவலர்களும் மதுரை மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில் ஐந்து காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர், மேலும் தந்தை- மகன் கொலை தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால துரை உள்ளிட்ட ஐந்து காவலர்களை அதிரடியாக கைது செய்த சிபிசிஐடி போலீசார், அவர்களை தூத்துக்குடி மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us