thoothukudi

இலங்கையில் மையம் கொண்டிருந்த‘புரெவி’ புயல், இன்று மதியத்திற்குப் பிறகு, டெல்டாவின் தெற்குப் பகுதியானமணமேல்குடி உள்ளிட்ட பகுதிகளில் வலுவிழந்து கரையைக்கடந்தநிலையில், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காற்று வீசத் தொடங்கியுள்ளது.

Advertisment

தற்பொழுது ‘புரெவி’ புயல் பாம்பனைநெருங்கிவரும் நிலையில், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் மாலை 6 மணிமுதல்பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனத் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல்கடற்கரை மற்றும் நீர் நிலைகளுக்குச் செல்லவேண்டாம் எனவும்தெரிவித்துள்ளார்.

அதேபோல், இன்னும் 3 மணி நேரத்தில் புயல் கரையைக் கடக்கும்எனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இதன்காரணமாக 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. திருச்சி,திண்டுக்கல்,அரியலூர்,கடலூர்,திருவாரூர், தஞ்சை,விழுப்புரம்,ஈரோடு, ராமநாதபுரம்,நாகை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment