Advertisment

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சமீபம் உள்ள கம்மாபட்டியைச் சேர்ந்தவர் மில்டன்ராஜ். அடிப்படையில் இவர் டிரைவர் என்றாலும், அதே பகுதியைச் சேர்ந்த விஜயனும் மில்டன்ராஜீம் நண்பர்கள். டிரைவர் வேலையை விட்டு வி்ட்டுச் சில நாட்களாக தன் நண்பன் விஜயனுடன் கட்டிட வேலைக்குப் போயிருக்கிறார் மில்டன்ராஜ். ஆனாலும், மி்ல்டன்ராஜ் நண்பன் என்ற வகையில், விஜயனின் வீடு வரை சென்று பழகியிருக்கிறார். இருவரும் ஒன்றாகவே சரக்கு் அடித்திருக்கிறார்களாம். இந்த நட்பு மில்டன்ராஜை, விஜயனின் மனைவியோடு தொடர்பு வரை கொண்டு போயிருக்கிறதாம். இவைகள் காற்றுவாக்கில் விஜயனுக்குத் தெரியவர, விஜயன் தன் அணுகுமுறையை மாற்றாமல் மில்டனுடன் சகஜமாகவே நடந்திருக்கிறார்.

friends

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இதனிடையே கடந்த மாதம் 25ம் தேதி நண்பன் விஜயனுடன் சென்ற மில்டன்ராஜ் அதன்பின் வீடு திரும்பவில்லையாம். ஆனால் அவரது பிணம் சூரியமினிக்கம் பக்கமுள்ள தோட்டத்தில் குத்தப்பட்டு அழுகிய நிலையில் கிடந்ததைக் கைப்பற்றிய டி.எஸ்.பி. ஜெயராஜ், கயத்தாறு இன்ஸ்பெக்டர் பத்மாவதி விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்கள். சந்தேகத்தினடிப்படையில் விஜயனை பிடித்து விசாரித்த போது முரண்படான பதில் வரவே, அவர் தெரிவித்த தகவல்கள் தவறானது என்பது தெரிய வந்திருக்கிறது. பின்னர் போலீசின் அடிப்படை பாணியில் விஜயன் விசாரிக்கப்பட்டபோது நடந்தவைகளை வாக்கு மூலமாகவே தெரிவித்திருக்கிறார்.

தன்னுடன் உயிராகப் பழகிய நண்பன் மில்டன்ராஜ் தனது மனைவியோடு நெருங்கிப் பழகியதோடு அவர்களுக்குள் தொடர்பும் இருந்திருக்கிறது. அவன் தொடர்பை விடுவதாக இல்லை. சம்பவ தினத்தன்று கயத்தாறு அருகேயுள்ள வெள்ளாளன் கோட்டையில் நடந்த சர்ச் திருவிழாவிற்கு மில்டன்ராஜுடன் சென்றிருக்கிறார் விஜயன். பின்னர் இருவரும் மது அருந்தியிருக்கிறார்கள். ஆனால் மில்டன்ராஜ் அதிக போதையிருந்திருக்கிறார். அதுசமயம் அவனது செல்லைப் பார்த்த விஜயனுக்கு அதிர்ச்சி. தன் மனைவியை ஒரு மாதியான கோணத்தில் அவன் படம் பிடித்திருந்தது விஜயனை ஆத்திரப்பட வைத்திருக்கிறது. அடங்காத ஆத்திரம், கோபத்தாலும் இந்த இடத்திலேயே போதையிலிருந்த மில்டன்ராஜை,, கம்பு கல் கொண்டு தாக்கிப் பின் கத்தியால் குத்தியும் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதைத் தெரிவிக்கின்றனர் கயத்தாறு சரகப் போலீசார். கூடாநட்பு கொலையில் விடிந்திருக்கிறது.